விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பிரிவினருக்கு 3% இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ள நிலையில், அதிலும் சாதி வாரியான இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இல்லாத கல்லூரிகளில், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சேர்க்கைக்காக வந்தால், அவருக்கு இட ஒதுக்கீடை ஏற்படுத்தி அதன்படி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
சாதி வாரியான இட ஒதுக்கீடு எக்காரணத்தைக் கொண்டும் மறுக்கப்படக் கூடாது; அதில் விதிமீறலும் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.








