பொது வெளியில் ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ” எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என பதிவிட்ட நிலையில் அந்த பதிவை அவர் அழித்துவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மணீஸ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிரச்சினையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப்சிங் பேடி பற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது.திரு பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை.
அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை.உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு.பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை.உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு.பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/xN7nh7eqWB
— Dr D.Ravikumar (@WriterRavikumar) June 8, 2023
- பி.ஜேம்ஸ் லிசா