நடிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித் தங்களது படப்பிடிப்புகளை இங்கேயே வைத்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, வருகின்ற 8 ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு நடைபெறுவதால், படப்பிடிப்புகளை கைவிட வேண்டி கோரிக்கைகள் எழுந்ததால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது என கூறினார். தயரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கமும் இணைந்து பேசி சம்பள முடிவுகள் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒப்பந்தம் சம்மந்தப்பட்டு பேசியதாகவும், ஆனால் புரிந்தலின்மை பிரச்சனையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றார். தமிழ் திரைப்பட துறை தொழிலாளர்கள் தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக தான் பணிவாக செல்ல விரும்புவதாக அவர் தெரிவித்தார். எங்களுக்கு கேட்க மற்றும் சண்டை போட தெரியும் என்ற அவர், இருப்பினும் சண்டை போட நாங்கள் விரும்பவில்லை, பிறகு பெப்சி தான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டது என்ற பெயர் எங்களை வந்து சேரும் என்றும் விளக்கமளித்தார்.
சில சமயங்களில் வெளி நாடுகளில் படப்பிடிப்பிற்கு சென்றால் பிரச்சனை இல்லை. எப்பொழுதும் சென்றால் நஷ்டம் தான் எனக்கூறிய அவர், நடிகர் அஜித்திகுமார் தங்களது படப்பிடிப்புகளை இங்கேயே வைத்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நடிகர் அஜித்குமார் தங்களது படப்பிடிப்புகளை ஹைத்தராபாத்தில் வைப்பதினால் பல தொழிளார்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றும் ஆர்.கே.செல்வமணி வேதனை தெரிவித்தார்.
இதே கோரிக்கைகயை நடிகர் சங்கத்தினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், மற்ற மொழி பட தொழிளார்கள் சம்பளத்தை காட்டிலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு 10 % வரையில் வித்தியாசம் இருக்கும். என்றார். மேலும் தயாரிப்பாளர் சங்கம் ,பெப்சி இடையேயான கருத்து வேறுபாடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.







