தென் மாவட்டங்களில் நன்கு படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் – அதிமுக ஆலோசனை

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அதிமுக தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர், அதில், தென் மாவட்டங்களில், நன்கு படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அதிமுக தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர், அதில், தென் மாவட்டங்களில், நன்கு படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில், தென் மாவட்டங்களில், நன்கு படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48000 கனஅடியாக அதிகரிப்பு’

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தப்பட்டு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.