நாளை குரூப் 2 தேர்வு – தேர்வர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்பட 5,529 காலியிடங்களுகளை நிரப்புவதற்காக நாளை நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ பிரிவுகளை எழுத உள்ளவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையம் வர…

அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்பட 5,529 காலியிடங்களுகளை நிரப்புவதற்காக நாளை நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ பிரிவுகளை எழுத உள்ளவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையம் வர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

நாளை நடைபெற குரூப் 2, 2ஏ தேர்வை எழுத 6.82 லட்சம் பெண்கள் உட்பட 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொதுத் தமிழ் பிரிவை 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கிலம் பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். இதற்கேற்ப தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்.

இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். எனினும். காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. அதிகபட்சமாக காலை 8.59 மணி வரைக்குள் வருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வரும்போது ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்துவர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு கறுப்பு நிற பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.