26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை மும்பையில் இன்று அறிவித்த அவர், தற்போதைய ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தற்போதைய ரெப்போ வட்டி விகிதமான 6 புள்ளி 5 விழுக்காட்டில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் தொடர்ந்து பேசிய கொரோனா காலத்தில் இருந்ததை விட நாட்டின் பொருளாதாரம் தற்போது அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறிய சக்தி காந்ததாஸ். சர்வதேச பொரளாதார நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

நடிகை நயன்தாரா திருமணம்; பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள்

G SaravanaKumar

நோயாளிகள் போல நடித்து ரூ.70 கோடி மதிப்பு ஹெராயின் கடத்திய பெண்கள் கைது!

Halley Karthik

விவசாய சங்கத் தலைவர் மீது கருப்பு மை வீச்சு

Mohan Dass