‘டிசி’ திரைப்படத்தின் ‘ரிலீஸ் டிரெய்லர்’ வெளியீடு…!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அருண் மாதேஷ்வர் இயக்கியுள்ள ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக வரும் ஜூலை 31ம் தேதி படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘டிசி’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டிசி திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.