“ஒரு அற்புதமான விளையாட்டு வாழ்க்கை” – ரகானே ஓய்விற்கு சச்சின் வாழ்த்து…!

இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரகானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலைதளப்பதிவு மூலம் இந்த முடிவை அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருடனான தம் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு சிறப்பான விளையாட்டு வாழ்க்கைக்கு வாழ்த்துகள் ரகானே..! நாம் முதன்முதலில் மும்பை அணிக்காக இணைந்து பேட் செய்தபோது, ​​தருணங்களை ஒருபோதும் துரத்தாத ஒருவரை நான் கண்டேன்.

அணிக்காகக் கடினமாக உழைக்க நீங்கள் தயாராக இருந்ததால், அந்தத் தருணங்கள் உங்களிடம் வந்தன. அதே குணம்தான் ஆஸ்திரேலியாவில் உங்கள் மிகச்சிறந்த தருணத்தை வரையறுத்தது. நிதானம் என்பது ஆக்ரோஷத்திற்கு எதிரானது அல்ல என்பதை நீங்கள் காட்டினீர்கள். அதுதான் பெரும்பாலும் ஒரு அணிக்கு அச்சமின்றி இருப்பதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

ஒரு அற்புதமான விளையாட்டு வாழ்க்கைக்கு வாழ்த்துகள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.