ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிக்மா படம் வரும் ஜூலை 31ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஜேசன் சஞ்சயும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமன் இசையமைக்கும் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து, படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில், சிக்மா படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிக்மா திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.