தஞ்சை அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாமல் நோயாளியை உறவினர்களே தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இந்த நிலையில், நோயாளி ஒருவரை, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் ஸ்ட்ரெச்சர் கிடைக்காததால், நோயாளியை உறவினர்களே தூக்கிச் சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







