தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு; திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நிகழ்வுகள் தொடங்கியுடன், தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மான கோரிகைகையை எழுப்ப டி.ஆர்.பாலு முயன்றபோது,…

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவை நிகழ்வுகள் தொடங்கியுடன், தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மான கோரிகைகையை எழுப்ப டி.ஆர்.பாலு முயன்றபோது, சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்காமல், கேள்வி நேரத்தை தொடங்கினார்.

அப்போது, நீட் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்றும், சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார் எனவும் குற்றம்சாட்டினார். எனவே, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் இதற்கு இசைவு தெரிவிக்ககாததால் தி.மு.க உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அண்மைச் செய்தி: ‘மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்’ – ஓபிஎஸ் வலியுறுத்தல் 

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக பேச அனுமதி கேட்டு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். ஆனால், அவை தலைவர் அனுமதி தராததால் உறுப்பினர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.