பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- தலைவர்கள் வரவேற்பு

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைப்பு, சமையல் எரிவாயுவிற்கு 200 ரூபாய் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனை பொதுமக்கள் மற்றும் பல்வேறு…

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைப்பு, சமையல் எரிவாயுவிற்கு 200 ரூபாய் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதனை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், எப்போதும் நமக்கு பொதுமக்கள் நலன் தான் முக்கியமாக இருந்துள்ளது. அதன்படி இன்று பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு போன்று எடுக்கப்பட்டிருக்கும் சில முக்கிய முடிவுகள் மூலம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1528017176468373506

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், ‘பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒருமுறை குறைத்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி. திமுக அரசு இப்போதாவது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முன்வருமா? தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு செய்வதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1528011420154986498

 

பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பதிவில், ‘இம்முறையாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மக்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து சாதாரண மக்களின் துயர் துடைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தாமாக தலைவர் ஜி.கே.வாசன் தனது அறிக்கையில், ‘மத்திய அரசு பொதுமக்களின் பொருளாதார சுமையை கவனத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தும், எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்குவது குறித்தும் வெளியிட்டிருக்கம் அறிவிப்பு நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியாக பேருதவியாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், ‘
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நடவடிக்கையில் இது போதாது. இன்னும் குறைக்கப்பட வேண்டும்’ என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.