தெற்கு உள்கர்நாடகாவிற்கு அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில், தற்போது தெற்கு உள்கர்நாடகாவிற்கு அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தீவிரம் அடையும் தென் மேற்கு பருவக்காற்று வரும் 23ம் தேதி வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக உருவாகும். இன்று முதல் அடுத்த 3 மகாராஷ்டிரா,தெற்கு உள் கர்நாடகாவில் அதீத கனமழை இருக்கும்.” என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்றும் நாளையும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தெற்கு உள் கர்நாடகாவில் கனமழை தொடரும் பட்சத்தில் காவிரியில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







