சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

சென்னை, கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

சென்னை, கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அண்மைச் செய்தி: ‘மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!’

அதன்படி சென்னை, கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரெட்ஹில்ஸ் சாலையில் அமைந்துள்ள 7841 சதுர அடி பரப்பிலான இடம் சாதுல்லா சாயுபு என்பவருக்கு வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக வாடகை தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் அவர்மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுத் தீர்ப்பின்படி இன்று காவல்துறை உதவியுடன் வருவாய்த் துறையினரின் முன்னிலையில் வணிக நிறுவனம் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.