ஆதிபுருஷ் திரைப்படம் ’டிரிபெகா’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸுக்கு ஏகப்பட்ட, விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ் படம் பற்றிய அறிவிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் தயாரிப்பாளர்களிடம் கோக்கத் தொடங்கியுள்ளனர். #StartAdipurushPromotions என டிவிட்டரில்ட்ரெண்ட் செய்தனர்.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கிய ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் திரைப்படத் தழுவலாகும். மேலும் இதில் கிருத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் லங்கேஷாகவும் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ் வெளியீட்டுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாலும், படத்தைப் பற்றி பெரிய அளவில் எந்த அறிவிப்பும் வராததாலும் பிரபாஸ் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இயக்குநர் ஓம் ரவுத் உட்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பல நெட்டிசன்கள் ஆதிபுருஷ் அப்டேட் கேட்டு Hashtags ஐ ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்த படம் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் படக்குழு சந்தித்த நிலையில், மீண்டும் அதை மெருகேற்றும் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், படம் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







