கட்சி தலைமை சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: எடியூரப்பா

கட்சி தலைமை கூறும்வரை முதலமைச்சராகத் தொடர்வேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்ற இருப்பதாவும் புதிதாக வேறு முதலமைச்சரவை பாஜக நியமிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள்…

ட்சி தலைமை கூறும்வரை முதலமைச்சராகத் தொடர்வேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்ற இருப்பதாவும் புதிதாக வேறு முதலமைச்சரவை பாஜக நியமிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி கருத்து தெரிவிக் காமல் இருந்த முதலமைச்சர் எடியூரப்பா, இப்போது முதன்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கட்சித் தலைமைக்கு என் மீது நம்பிக்கை இருக்கும்வரை நான் முதலமைச்சராக தொடர்வேன். பதவியில் இருந்து விலகுமாறு எப்போது கூறுகிறார்களோ, அப்போது ராஜினாமா செய்துவிட்டு மாநில மக்களின் நலனுக்காக இரவும் பகலுமாக உழைப்பேன் என்றார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகிஸ்வரா உட்பட சில அதிருப்தி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவருடைய தலைமைக்கு எதிராக அளித்த புகார்கள் குறித்து கேட்டபோது, ’அதை பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், என் நிலைப்பாடு தெளிவானது’ என்றார்.

துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஷ்வத் நாராயணன் கூறும்போது, ‘எடியூரப்பா பதவி விலகுவார் என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.