முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

நைஜீரியாவில் ட்விட்டர் தடை எதிரொலி; கால் பதிக்கும் “கூ”

நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு கூ செயலி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி (78) பதவி வகிக்கிறார். சமீபத்தில் இவர் நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி இந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான கூ, நைஜீரியாவில் கால்பதித்து, ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக கூ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கூ செயலியை தற்போது நைஜீரியாவில் பயன்படுத்தலாம். மேலும், அங்குள்ள உள்ளூர் மொழியை கூ செயலியில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கூ ஒரு உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. தேவைப்படும் நாடுகளில் நாங்கள் செயலியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவோம்” என கூறினார்.

Advertisement:

Related posts

தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

Jeba

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை; கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

Karthick