ஆசிரியர் தேர்வு தமிழகம்

என்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில், பரபரப்புரையை மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கான திட்டங்களை கவனமாக செயல்படுத்தி வருவதாக கூறினார். நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னுதரமானமாக திகழ்வதாகவும், அவர் குறிப்பிட்டார். பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் நடத்துவதால், எந்த பலனும் இல்லை என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, மக்களிடம் வாங்கிய மனுக்களில், எத்தனை பிரச்னைகளுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டார் என்றும், முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். டெண்டர் நடக்காத பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக, அமைச்சர்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டி வருவதாகவும், அவர் குறிப்பிட்டார். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என்றவர், விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு

Gayathri Venkatesan

‘பாரத பேரரசு’ என அழைப்போம்: குஷ்பு

ரூ 2.50 லட்சத்துக்கு வருமான வரியா? – தடைகோரி வழக்கு

EZHILARASAN D

Leave a Reply