செய்திகள்

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில், கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள், தனது பிரச்சாரத்திற்கு வருவதாகக் கூறினார். தனது கூட்டங்களுக்கு வரும் மக்கள், தானாக வந்தவர்கள் என்றும், பணம் கொடுத்து யாரையும் அழைத்து வரவில்லை, என்றும் கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா திண்டாட்டத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் பேசிய அவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஆற்றை குப்பை கழிவுகள் அதிகமாக உள்ளது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது குடியாத்தம் தொகுதி கல்வி தந்தை காமராஜர் நின்று வெற்றி பெற்ற தொகுதி . பழையது கழித்தாக வேண்டும் புதியது புகுத்தாக வேண்டும் என்று பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் மக்கள் நீதி மையம் கண்டிப்பாக இதனை செய்து காட்டும். குடியாத்தம் பகுதி பெரிய நகரங்கள் போல் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார் பிரச்சாரத்தில் கட்சி தொண்டர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. தடுப்பூசி எடுத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி கோரிக்கை

Halley Karthik

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்!

Jeba Arul Robinson

பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை உயிரிழப்பு!

எல்.ரேணுகாதேவி

Leave a Reply