ஐபிஎல் போட்டியில் குஜராத டைட்டன்ஸ் அணியின் அதிரடி வெற்றியால் RCB யின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. லேசான மழை காரணமாக போட்டி ஏறக்குறைய 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
வழக்கமாக 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 8.25 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் அணியின் கேப்டன் டுபிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
டூபிளெசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கிலென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் என அடுட்த்தடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், விராட் கோலி மட்டும் நிதானமாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதனையடுத்து கோலிக்கு கைகொடுத்த அனுஜ்ராவத் நிதானமாக விளையாடியதால் கடைசி ஓவரில் 60 பந்துகளில் சதம் அடிட்த்தார் விராட் கோலி. இதன் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த வீரர் என்கிற சாதனையை கோலி பெற்றுள்ளார். 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரித்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர் 12 ரன்களில் ரித்திமன் சாஹா மற்றும் விஜய் சங்கர் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தசுன் ஷனகாவும், டேவிட் மில்லரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனையடுத்து ராகுல் தெவாதியா மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. சுப்மன் கில். 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுமன் கில் சதம் விளாசினார். இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் பிளே ஆஃப் சுற்றுக்களில் இருந்து வெளியேறியது.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் தகுதிச் சுற்றுக்கள் நுழைந்துள்ளன. இந்த நிலையில் வரும் செவ்வாய்கிழமை சிஎஸ்கே-குஜராத் வரும் புதன் கிழமை மும்பை-லக்னோ அணியும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.







