ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்காக ஜெய் பீம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
இயக்குநர் ஞானவேலின் ஜெய் பீம் திரைப்படத்தில் சூர்யா பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில எதிர்ப்புகளை சம்பாதித்தாலும் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை குவித்தது.
இந்தப் படம் 2 வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. ஆனால் அது வெளியானதில் இருந்து தற்போது பாராட்டுகளை தொடர்ந்து பெற்ற வண்ணமே உள்ளது. சீனாவில் பெய்ஜிங் திரைப்பட விழா 2022 இல் இந்தப் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றது.
https://twitter.com/2D_ENTPVTLTD/status/1660294194198609920?s=20
இந்த நிலையில் ஜப்பானின் ஒவ்வொரு வருடமும், தமிழில் வெளியாகும் படங்களுக்கு பல்வேறு பட்டியல்களில் அடிப்படியில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் நடிகை லிஜோ மோல் ஆகியோருக்கு வழங்கப்படவிருக்கிறது.இது குறித்து 2டி தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.







