இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.…

இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனக் கூறினார். அதன்படி, ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக தொடர்வதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளார்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 17.1 சதவீதமாக, பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சில்லறை பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.  ஐ.எம்.பி.எஸ் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற வரம்பை 2 லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்த்காந்த தாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.