’இராவணக் கோட்டம்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் – நாடார் சங்கங்கள் கோரிக்கை

‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று, நாடார் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், நாடார் சங்கங்கள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு…

‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று, நாடார் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், நாடார் சங்கங்கள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

”தென் தமிழகத்தில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய தமிழ் சாதிகளை பிளவுபடுத்தும் நோக்கோடும், கலவரங்கள் ஏற்படுத்தும் வகையிலும், காமராஜரை பற்றி தவறான கருத்துக்களை திட்டமிட்டு பரப்ப முயலும் ‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். இராவணக் கோட்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜரை பற்றி தவறான கருத்துக்களை கூறியதற்காக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1876 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் வெள்ளைக்காரர்களால் தூவப்பட்ட சீமை கருவேல மர விதைகள், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தூவப்பட்டுள்ளதாக காட்சி வைக்கப்பட்டிருப்பதாக, உண்மைக்கு புறம்பான காட்சி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி கலவரங்கள் மீண்டும் இந்த படம் மூலம் வராமல் தடுத்து நிறுத்திட மறு தணிக்கை செய்ய வேண்டும். இந்த படம் வெளிவந்தால் மக்களிடையே கலவரங்கள் ஏற்படும். எனவே படத்தை தடை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் : CSK-வுக்கு விசில் போட்ட நீலாம்பரி…! – போட்டோ இணையத்தில் வைரல் 

இராவணக் கோட்டம் திரைப்படம் வெளியிடப்பட்டால், தென்தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் ஓடாது. சென்னையில் வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம். இதுகுறித்து நாளை காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்”.

இவ்வாறு தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.