அழைப்பிதழ் விவகாரம் – அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதாக தமிழிசை குற்றச்சாட்டு

புதிய சட்டமன்ற வளாகம் மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு மாநில அரசு ஏன் அழைப்பிதழ் அனுப்பவில்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆளுநர் தமிழிசை…

புதிய சட்டமன்ற வளாகம் மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு மாநில அரசு ஏன் அழைப்பிதழ் அனுப்பவில்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடு நலம்பெற்று பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன். இறைவனின் அருளால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் தெலுங்கானாவில் நாட்டிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. மேலும் தெலுங்கானா மாநில புதிய சட்டமன்ற வளாக திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்த கேள்விக்கு பதிலத்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மாநில ஆளுநர் என்ற முறையில் எனக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அழைப்பிதழ் விவகாரத்தில் அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதாக தமிழிசை குற்றச்சாட்டினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.