சாம்பாரில் செத்துக் கிடந்த எலி – உணவகத்திற்கு சீல்! வீடியோ வைரல்!

அகமதாபாத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பறிமாறப்பட்ட சாம்பாரில் எலி கிடந்ததை அடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி,  எலி,  பல்லி,  பூரான் போன்றவைகள் கிடப்பதாக…

அகமதாபாத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பறிமாறப்பட்ட சாம்பாரில் எலி கிடந்ததை அடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி,  எலி,  பல்லி,  பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  அதாவது குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நிகோல் என்ற பகுதியில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது.

அந்த உணவகத்திற்கு அவினாஷ் என்பவர் தன் மனைவியுடன் சாப்பிட சென்றதை அடுத்து அவர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர்.  அப்போது கொண்டு வந்த சாம்பாரில் ஏதோ மிதந்தது போல் தெரிந்ததால் அவினாஷ் அதை கவனித்து பார்த்தார்.  அப்போது சாம்பாரில் எலி ஒன்று  செத்து கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து,  அவினாஷ் இது குறித்து ஊழியர்களிடமும்,  நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தார்.  இதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று  சோதனை நடத்தினர்.  தொடர்ந்து அவர்கள் உணவகத்திற்கு சீல் வைத்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.