காதல் முறிந்த நிலையில், மூன்று அறைகள் கொண்ட வீட்டை மும்பையில் 8 கோடிக்கு வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
நேஷனல் க்ரஷ் என தன் ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது பல படங்களில் நடித்து வருகிருகிறார். தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா, விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் மீண்டும் விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து நடித்த “டியர் காம்ரேட்” படம் தெலுங்கு திரைப்படம் தாண்டி அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தான் “அல்லு அர்ஜூன் ” நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான “புஷ்பா” படம் ராஷ்மிகாவை மலையாளம், இந்தி எனப் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவருக்குத் தேடித்தந்தது. மேலும் ராஷ்மிகா தற்போது விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்துவருகிறார்.
இதற்கிடையில், இந்தியில் “குட் பை” எனும் படத்தில் அமிதாப் ப்ச்சனுடனும், “மிஷன் மஜ்னு” எனும் வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து மேலும் இந்தியில் 2 படங்களுக்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தேவர்கொண்டாவை காதலித்து வந்ததால் தான் ராஷ்மிகா ஐதராபாத்தில் தங்கி இருந்ததாகவும் ஆனால், தற்போது இருவருக்குமான காதல் முறிந்தத நிலையில் தான், மூன்று அறைகள் கொண்ட வீட்டை மும்பையில் 8 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் கூறப்படிகிறது. மேலும், இந்தியில் பட வாய்ப்புகள் நிறைய வருவதால், அங்கேயே தங்கி பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த இந்த வீடு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.







