ஜெய்பீம் பட விவகாரம்-காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜெய்பீம் திரைப்படத்தின் கதை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜெய்பீம் திரைப்படத்தின் கதை குறித்து வழக்கு
பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியும் சம்பந்தப்பட்ட
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2D நிறுவனம் தயாரித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த
திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் பிரபல ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியது.
இந்த திரைப்படம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு, பார்வதி உள்ளிட்டோரிடம்
காவல்துறை செய்த அட்டூழியத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்
ஆகும்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ஜெய்பீம் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் எழுதப்பட்டு காட்சியமைக்கப்பட்டுள்ளது.

அந்த திரைப்படம் இயக்குவதற்கு முன் படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா தன்னிடம் சந்திது பேசியதாகவும் அப்போது தனக்கு நடந்த அநியாயம் குறித்து எழுதிய கதை குறிப்பை அவர் தன்னிடம் வாங்கியாத குளஞ்சியப்பன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பணம் தருவதாகவும் ஒப்புக் கொண்டார். ஆனால் பணம் தரவில்லை. இதனை அடுத்து சென்னைசென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றாதாகவும் அந்த புகாரில் தெர்வித்துள்ளார்.

இந்தக் காவலர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் இதுகுறித்து வழக்கு பதிவுப்செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் தற்போது வரை வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே சென்னை காவல் ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் லுங்கி அணிந்து வந்த குளஞ்சியப்பனை
பாதுகாப்பில் இருந்த காவலர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனை அடுத்து அருகில் இருந்த ஜவுளிக்கடையில் புதியதாக வேஷ்டி வாங்கி
அணிந்த பின்னர் புகார் அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். பட்டியல்
இனத்தைச் சேர்ந்த இது போன்ற லுங்கி தான் தாங்கள் பெருமாபாலும் அணிகிறோம்.

எனவே இந்த விதியை காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றி அமைக்க வேண்டும் என
குளஞ்சியப்பன் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.