ஒரே நாளில் ரூ.576 கோடிக்கு ஏலம் போன அரிய கற்கள்!! – எங்கு தெரியுமா??

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த ரூபி கற்கள் மற்றும் அரிய பிங்க் நிற வைரம் ஆகியவை தலா ரூ.288 கோடிக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பை ஏல மையத்தில்…

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த ரூபி கற்கள் மற்றும் அரிய பிங்க் நிற வைரம் ஆகியவை தலா ரூ.288 கோடிக்கு அமெரிக்காவில் ஏலம் போனது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பை ஏல மையத்தில் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த, மதிப்புமிக்கதாக கருதப்படும் ரூபி கற்கள் மற்றும் அரிய பிங்க் நிற வைரம் பொது ஏலத்திற்கு விடப்பட்டன.

அந்த ஏலத்தில் 55 கேரட் ரூபி கல், 286 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. அதேபோல, அந்த மையத்தில் பொது ஏலத்திற்கு விடப்பட்ட 11 கேரட் அரிய எடெர்னல் பிங்க் வைரமும், அதே விலைக்கு ஏலம் போனது.

இதையும் படியுங்கள் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – கேஸ்பர் ரூட்!!

ஏலம் போன இந்த ரூபி கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதாகும். இந்த இரண்டு அரிய கற்களும் ஒரே நாளில், ஒட்டுமொத்தமாக 576 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளதாக ஏல நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.