பிரெஞ்சு ஓபன் டெனிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு நோவக் ஜோகோவிச் மற்றும் கேஸ்பர் ரூட் முன்னேறினர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இது தற்போது தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸுடன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் இழந்தார். தொடர்ந்து மூன்றாவது செட்டை 6-1, நான்காவது செட்டை 6-1 என அதிரடியாக ஜோகோவிச் கைப்பற்றினார். இவ்வாறு 3-1 என்ற செட் கணக்கில் அரையிறுதிப் போட்டியை வென்ற நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதையும் படியுங்கள் : நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் எதிரொலி – மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்
அதேபோல் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், உலகின் நான்காம் நிலை வீரரான நார்வேவை சேர்ந்த கேஸ்பர் ரூட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வர்வ்ஸ் ஆகியோர் மோதினர். இதில் கேஸ்பர் ரூட் அடுத்தடுத்து மூன்று செட்களை 6-3, 6-4, 6-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதனால், அரையிறுதிப் போட்டியில் 3-0 என நேர் சேட்களில் கைப்பற்றி வெற்றி பெற்ற கேஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.