மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அந்தப் பெண்ணின் தந்தை சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விஜய் மெர் (32). இவர் அந்தப் பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணைக் காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் கடந்த வருடம் ஊரை விட்டு ஓடிவிட்டனர். அந்தப் பெண்ணின் தந்தை, தனது மகளை காணவில்லை என்று போலீ சில் புகார் கொடுத்தார். அவர்கள் விஜய் மெர்ரையும் மகளையும் கண்டுபிடிக்காததால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார், விஜய் மெர்ரையும் மைனர் பெண்ணையும் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாக விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் மெர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையறிந்த மைனர் பெண்ணின் தந்தையும் அவர் நண்பர் தினேஷ் என்பவரும் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு, விஜய் மெர், ராஜ்கோட்டின் சன்கபூர் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். இதையறிந்த அவர்கள், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் மெர் உயிரிழந் தார். விஜய் மெர்-ரின் சகோதரர் அஸ்வின் மெர் கொடுத்த புகாரை அடுத்து, மைனர் பெண்ணின் 42 வயது தந்தை, அவர் நண்பர் தினேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.