இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மீதமுள்ள ஆட்டங்கள் தொடங்க இருக்கும் நிலையில் பெங்களூரு அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக, பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய 31 போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19- ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் காடிச் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா. டேனியல் சாம்ஸ், ஃபின் ஆலென் ஆகியோர் விலகியுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக இலங்கையின் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா, ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அழைக்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை தந்திருப்பதாக வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.








