முக்கியச் செய்திகள் தமிழகம்

கமல் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி

மக்கள் நீதி மையத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் பொருட்டு, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

 

கட்சியின் நலன்களைப் பாதிக்கும் விதமாக நடந்துகொள்பவர்கள் மீது நியாயமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் புகார் அளித்தால், ஜன்நாயக் முறைப்படி நேர்மையான, வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, உண்மை நிலையைக் கண்டறிந்து தலைவருக்குப் பரிந்துரைப்பது இந்த குழுவின் செயல்பாடுகளாகும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

புகார்களை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமான கடிதம் அல்லது மின்னஞ்சல் (grievancecell@maiam.com) வடிவில் ஒழுங்கு நடவடிக்கைக் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இரண்டு தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டறிந்த பிறகு, ஆதாரங்களை சரிபார்த்த பிறகு, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இதற்கான தீர்வாக விளக்கம் கோரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் தொடர்பான அறிவிப்பையோ (ஷோ காஸ் நோட்டீஸ்), அல்லது நேரடியாகத் தற்காலிகப் பதவி நீக்கத்தையோ, அல்லது குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் பதவியிலிருந்தோ கட்சியிலிருந்தோ நீக்கும் முடிவையோ தலைவருக்கு இந்த குழு பரிந்துரைக்கும். பிறகு, தொடர்புடைய நபர் மீது, தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி நியாயமான வகையில் வெளிப்படைத் தன்மையுடனும் விரைந்து செயல்படவும், இனி வரும் ஒழுங்கு நடவடிக்கைப் புகார்களை மேற்கண்ட விதத்தில் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் உறுப்பினர்களாக கீழ் கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

1) M.V.பாஸ்கர், ம.நீ.ம. சட்ட ஆலோசகர்

2) A.G.மௌரியா, துணைத்தலைவர், கட்டமைப்பு

3) P.ஷண்முக ராஜன், மாநில கூடுதல் செயலாளர் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தலையைக் கவ்வியது புலி… அரிவாளால் தாக்கித் தப்பிய பெண்

Ezhilarasan

மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

நீட் தேர்வு விவகாரம் “மாநிலங்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு”.

Halley Karthik