முக்கியச் செய்திகள் இந்தியா

புயல், மழை – மூன்றே நாளில் சேதமான புதிய பாலம்

கால நிலை மாற்றம் காரணமாக கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதக்கும் பாலம் மூன்றே நாளில் சேதமானது.

 

கர்நாடகா மாநிலம் மால்பே கடற்கரையில் மிதக்கும் பாலம் திறக்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்ட இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்திலேயே முதல் மிதக்கும் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை உடுப்பி எம்எல்ஏ ரகுபதி பத் திறந்து வைத்தார். 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பார்ப்பதற்காக 15 நிமிடங்களுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

 

இந்த பாலம் 100 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டது. இது அதிக அடர்த்தி கொண்ட போண்டோன்ஸ் எனப்படும் மூலப் பொருள் மூலம் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் முடிவில் 12.5 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட தளத்தில் சுற்றுலா பயணிகள் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், பாலம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால், மிதக்கும் பாலம் சேதமடைந்தது. திறக்கப்பட்டு மூன்றே நாட்களில் பாலம் சேதமானதையடுத்து, அங்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதேபோல், பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்ததோடு, சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. கால நிலை மாற்றத்தால், சமீபத்தில் திறக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியம் உட்பட நகரம் முழுவதும் உள்ள சில உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்த நிலையில், மிதக்கும் பாலமும் சேதமடைந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மொபைல் ஆட்டோ வீடு: சென்னை ஆர்கிடெக்கை பாராட்டிய மஹிந்திரா நிறுவன தலைவர்!

Gayathri Venkatesan

8 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்

Halley Karthik

ராணுவத்தை எதிர்த்த மியான்மர் அழகி!