இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று , ரம்ஜான் மாதம் நோன்பிருப்பது ஆகும். நோன்பின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை, குடும்பத்தார், உறவினர்கள் சூழ , எளியோருக்கு கொடையை வழங்கி கொண்டாடும் திருநாளே ரம்ஜான் பண்டிகை ஆகும். உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை ரம்ஜான்.
ரம்ஜான் பண்டிகை அன்று பெருமளவு இஸ்லாமியர்கள் ஒன்று கூடி , பெரிய மைதானங்களிலும், பள்ளி வாசல்களிலும் , மசூதிகளிலும் சிறப்பு தொழுகையை மேற்கொள்வர். . ஒரு மாதம் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட ஆயத்தமாக உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் மே மாதம் 14 ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். சென்ற ஆண்டைப்போல் , இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அவரவர் இல்லங்களிலே தொழுகையை நடத்தி வருகின்றனர். பொதுவாக ஷவ்வால் மாதம் வளர்பிறை நிலவின் பிறை தோன்றிய பின், அதை வைத்து ரம்ஜான் தேதி அறிவிக்கப்படும்.
இதுவரை பிறை தென்படவில்லை. ரமலான் பண்டிகைக்கான பிறை இன்று தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தமிழ்நாடு முழுவதும் மே பதினான்காம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.




