பாசிட்டிவ் நடிகருக்கு கொரோனா பாசிட்டிவ்!

மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர் சென்றாயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மேலும் பிரபலமடைந்தவர் சென்றாயன்.…

மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர் சென்றாயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மேலும் பிரபலமடைந்தவர் சென்றாயன். தற்போது அதே தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றிக்கும் சென்றாயன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நா நடிக்கலாம் இல்லைங்க உண்மையாவே ஆவி புடிக்கிறேன் வாழ்க்கைல எல்லாத்தையும் பாஸிட்டிவ்-ஆ பாத்தேன் இப்ப எனக்கே கொரோனா பாஸிட்டிவ்” என்று அவர் கூறியிருப்பது நகைச்சுவையாக இருந்தாலும் கொரோனா தாக்கத்தை பற்றி தான் பெரிதாக எடுத்துக்கொல்லாமல் அலட்சியமாக இருந்ததே இதற்க்கு காரணம் என்று வருந்தியுள்ளார்.

மேலும் அவர் “நாம் அனைவரும் நினைக்கும் அளவு இது சாதாரண நோய் அல்ல என்றும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அந்த காணொளியில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.