முக்கியச் செய்திகள் இந்தியா

ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடங்கியது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இரவு பிறை தெரிந்ததால், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் இன்று நோன்பை தொடங்கினர். அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரோனா விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் திராவியா எனப்படும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வர வேண்டும் என அவர்கள் தொழுகை நடத்தினர். கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பு காலங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா மற்றும் உட்புற கடைகள் குறைந்த அளவிலான பக்தர்களோடு காணப்பட்டது.

Advertisement:

Related posts

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்!

எல்.ரேணுகாதேவி

சுற்றுலாத் தலங்கள், கடற்கரைக்குச் செல்லத் தடை!

Ezhilarasan

எல்.முருகன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்: நடிகை கவுதமி!

Ezhilarasan