நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட பிரபல நடிகை!

உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நடிகர் விவேக் நினைவாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர், இந்த…

உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நடிகர் விவேக் நினைவாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர், இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். விழாவில் எஸ்பி அரவிந்தன் கூறும்போது, மாவட்ட காவல்துறை சார்பில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் கூறும்போது, உலக பூமி தினத்தன்று, ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும், அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும், 59 மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.