ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும்…

ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

 

ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் 04, 11, 18 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செகந்திராபாத் – இராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 02, 09, 16 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

 

இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 15) காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் – செகந்திராபாத் ரயிலை எதிர்நோக்கி இருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.