முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா சினிமா Instagram News

ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு சென்றுள்ள ராம்சரண்!

ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ள ராம்சரண், கருப்பு நிற ஆடையில் விமான நிலையத்திற்கு வந்தபோது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் தர்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது.

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலிலும் சிறந்த பாடலலுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் வருகிற மார்ச் 12-ந் தேதி நடைபெற உள்ளநிலையில் RRR படத்தின் நாயகன் ராம்சரண் இன்று அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுள்ளார். ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ள ராம்சரண், கருப்பு நிற ஆடையில் விமான நிலையத்திற்கு வந்தபோது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் தர்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சி தோல்வி

Web Editor

டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

EZHILARASAN D

4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல்: அதிமுக தீர்மானம்

Web Editor