முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

இருளில் ஒளியேற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் அந்த அறிவிப்பு…ஐ.டி. ஊழியர்கள் உற்சாகம்…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி நீக்கங்கள் தொடர்பான தகவல்கள் கவலை அளித்துக்கொண்டிருக்கும் வேலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் அந்த அறிவிப்பு ஐ.டி. துறை ஊழியர்களிடையே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் வகையில் உள்ளது. 

உலக பொருளாதாரம் மந்த நிலை இருக்கிறது அல்லது விரைவில் வருகிறது என்றெல்லாம் சுட்டிக்காட்டி கடந்த ஒருவருடங்களாக ஐ.டி.துறையில் வேலை பறிப்புகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வேலை நீக்க செய்திகளும், திடீர் பணி நீக்கத்தால் பரிதவிக்கும் ஊழியர்களின் சோக கதைகள் குறித்த செய்திகளும் அதிகரித்தே வருகின்றன. மெட்டா, கூகுள், அமேசான் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை அதிக அளவு பணி நீக்கம் செய்துள்ளன. நல்ல லாபத்தை பார்த்துவரும் நிறுவனங்கள்கூட பணி நீக்க அறிவிப்புகளை வெளியிட்டது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அமெரிக்காவில் மட்டும் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் என்றும் அவர்களில் 30லிருந்து 40 சதவீதத்தினர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு உலகம் முழுவதும் வேலை நீக்கம் தொடர்பான செய்திகள் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஊழியர்களிடையே நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

”நாங்கள் வேலையை பறிக்கமாட்டோம், வேலை கொடுப்போம்” என்று அறிவித்துள்ள அந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ். சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் டிசிஎஸ், அவர்களில் யாரையும் பணி நீக்கம் செய்யமாட்டோம் என்று கூறியதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை, பிற நிறுவனங்களில் பணியாற்றி வேலை இழந்த ஸ்டார்ட் அப் நிறுவன ஊழியர்களுக்கு வேலை கொடுக்கவும் செய்வோம் என அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு தங்கள் பணிகளை இழந்து பரிதவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கு நம்பிக்கை ஒளி கீற்றாக அமைந்துள்ளது.

பணி நீக்க அறிவிப்புகள் ஐடி துறை ஊழியர்களை அச்சுறுத்தி வரும் நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டும் இது எப்படி சாத்தியமானது, அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கொள்கை என்ன?

”ஒருவரை ஒருதடவை பணிக்கு எடுத்துவிட்டால் அவரது திறமையை மெருகேற்றி நீண்டகாலம் அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் ஹெச்ஆர் கொள்கை” என்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைமை அதிகாரி மிலிந்த் லக்காட். எந்த ஊழியரையும் நாங்கள் பணி நீக்கம் செய்யமாட்டோம் என உறுதியளித்து டிசிஎஸ் நிறுவன ஊழியர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ள மிலிந்த் லக்காட், அவர்களை மகிழ்ச்சியில் திழைக்க வைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். விரைவில் ஊதிய உயர்வு வழங்குவோம். அது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு போல் இருக்கும் அதற்கு குறைவானதாக இருக்காது என மிலிந்த் லக்காட் அறிவித்துள்ளார்.

”பிற நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக பணிக்கு ஊழியர்களை சேர்த்துவிட்டு தற்போது லேஆஃப் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்போதும் தேவைக்கு தகுந்தாற்போல் ஊழியர்களை நியமிக்கிறோம். அதனால் பணிநீக்கம் செய்யும் பிரச்சனை எங்கள் நிறுவனத்தில் எழவில்லை” என்றும் மிலிந்த் லக்காட் விளக்கம் அளிக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள மேலும் சில அறிவிப்புகள் பிற நிறுவனங்களில் பணியாற்றி வேலையை இழந்து நிற்பவர்களுக்கு பெறும் ஆறுதலாக உள்ளது.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றி வேலை இழந்து நிற்பவர்களுக்கு நாங்கள் பணி வழங்க தயாராக உள்ளோம் என்று கூறும் மிலிந்த் லக்காட், அமெரிக்காவில் ஐடிதுறை நிறுவனங்களில் பணியாற்றி தற்போது வேலை இழந்து நிற்கும் ஊழியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் மற்றொரு  தகவலையும் வெளியிட்டுள்ளார்.

”தற்போது அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்தான். இந்த பட்டியலில் இந்திய வம்சாவழியினரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் அளவிற்கு புதிய நியமனங்களை மேற்கொள்வோம்” என டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைமை அதிகாரி மிலிந்த் லக்காட் கூறியுள்ளது அமெரிக்காவில் வேலை இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிப்பவர்களுக்கு பெரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

-எஸ்.இலட்சுமணன்   

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

EZHILARASAN D

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

Niruban Chakkaaravarthi

வறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்கு

Web Editor