உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி காலமானார்.
சென்னை பாரிமுனையில் போக்குவரத்தினை சீரமைக்க காவலர்களுக்கு உதவியாக இருந்தவர்தான் இந்த ராமசாமி. இதன் காரணமாக பின்னாட்களில் இவர் டிராபிக் ராமசாமி என அழைக்கப்பட்டார். இவர் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் தொடர்ந்து சமூகத்தின் சிற்சில பிரச்னைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்து நீதிமன்றம் மூலம் தீர்வையும் கண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 20 ஆண்டுகளில் இப்பணியின் மூலம், வரம்பின்றி கட்டப்படும் கட்டிடங்கள், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள், போன்ற பிரச்னைகளையும் கையிலெடுத்து அதற்கான தீர்வையும் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியிலும் தொடர்ந்து துணிச்சலாக இயங்கியுள்ளார். இந்நிலையில் அவரது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவரது பாதுகாப்புக்கா நியமிக்கப்பட்டனர்.
87 வயதான அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.