கீழடியில் 7ம் அகழ்வாய்வில் மூடியுடன் கூடிய மண்பானை சிதைவுறாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறையின் இயக்குநர் சிவானந்தம், இணை இயக்குநர் பாஸ்கரன் தலைமையில் கடந்த பிப்ரவரி 13 முதல் 7ம் கட்டமாக அகழ்வாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அகழ்வாய்வில் ஏற்கெனவே 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அதில் பானை ஓடுகள், பகடை போன்ற கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இக்குழிகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மண்பானை சிதைவில்லாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் சிதிலமைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்த பானை சிதிலமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. இதன் காரணமாக இப்பானையின் உள்ளே உள்ள பொருட்களும் சேதமடையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.







