சட்டப்பேரவை திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக 133 இடங்களை தனித்து வென்றது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்லத்துக்குச் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்துக்கு வந்த ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அவர் நினைவிடத்தில் மூத்த நிர்வாகிகளுடன் சிறிதுநேரம் அமர்ந்திருந்து ஆலோசனை மேற்கொண்டார்.
நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்







