39 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழர்களுக்கு மட்டுமே வேலை – சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடந்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
தமிழ்நாட்டில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading