ரம்ஜான் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி ஊட்டில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரம்ஜான் மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறையை ஒட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரள, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
இதில் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கர்நாடகா
பூங்காவில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை ஒட்டி இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையில் 40 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் சைக்ளோமன், பிக்கோனியா, பெட்டுனியா, கிரை சாந்திமம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகைகளில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அதேபோல் பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளி மைதானங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்கள் குடும்பத்தினர்
மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா பயணிகள் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். ரம்ஜான் பண்டிகை விடுமுறை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உதகை நகரின் தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.