இந்தியாசெய்திகள்

அயோத்தி ராமர் பிரதிஷ்டை – டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட வலியுறுத்தல்!

அயோத்தி ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வருகிற 22-ம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் இந்த பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு அந்த நாளில், டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை அடைக்குமாறு, டெல்லி இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இர்ஷத் குரேஷி கூறியதாவது:

“அயோத்தியில் நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் உணர்வுகளை மதித்து, அன்று ஒருநாள் மட்டும் இறைச்சி மற்றும் மீன் விற்கும் விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தி வைக்கவேண்டும். ஒருநாள் கடையை மூடுவதால் நமது வியாபாரம் பெரிதாக பாதிக்கப்படாது. ஜன.22-ம் தேதி ஹிந்து சகோதர, சகோதரிகளின் கொண்டாட்டத்தை மதிக்கும் விதமாக இதனை நாம் செய்யவேண்டும்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக அதிகரிப்பு!

Jayasheeba

ஏப்.28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்

G SaravanaKumar

நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோயிலில் பரிவேட்டை!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading