ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் ; சிரஞ்சீவி மகிழ்ச்சி பகிர்வு…….!

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம் சரண் – உபாசனா தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவர் சிரஞ்சீவி. இவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிரஞ்சீவின் மூத்த மகன் ராம் சரணும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர். ஆர். திரைப்படமானது ராம் சரணுக்கு ஹாலிவுட் அளவில் புகழை தேடி தந்தது. தற்போது இவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் பெட்டி (Peddi) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கிரிக்கெட் மற்றும் கிராமிய பின்னணியில் உருவாகி வரும் இப்படமானது 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனை ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.