முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நேபாளத்தில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு!

நேபாளம் நாட்டின் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நேபாளம் காங்கிரஸ், சிபிஎன் உள்பட 8 கட்சிகள் ஆதரவுடன் ராம் சந்திரா பவுடால் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து சிபிஎம் கட்சி சாரிபில் நெம்பவாங் போட்டியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேபாள நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளில் இருந்து 884 உறூப்பினர்கள் அதிபரை தேர்வு செய்ய வாக்களித்தனர். இதில் ராம்சந்திரா பவுடால் 33 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பவாங் 15 ஆயிரத்து 518 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து ராம் சந்திரா பவுடால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ணா கார்கி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். புதிய அதிபர் ராம் சந்திரா பவுடாலுக்கு 78 வயதாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாலை விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்

Dinesh A

ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

Web Editor

உருமாறிய டெல்டா வகையை எதிர்க்க கூடுதலாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Jeba Arul Robinson