தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக் குழு அமைப்பு – தர்மேந்திர பிரதான்

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின்…

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கை தொடர்பாகவும் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற “டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்” தற்போது 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எலிகள் மூலம் புதிய வகை கொரோனா? – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மேலும், தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.