அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

விருதாச்சலத்தை சுத்தமும் சுகாதாரமாக மாற்றி தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ.பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூரில் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விருதாச்சலத்தில் தெப்பக்குளத்திற்கு செல்லப்படக்கூடிய நீர் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விருதாச்சலத்தில் 30 ஆண்டுகளாக பட்டா பெற்று வாழ்ந்து வ்றும் மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். விருதாச்சலத்தில் உள்ள மணிமுத்தாறு நதியில் கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக உள்ளது அதனை மீட்டெடுத்த தர வேண்டும்.

ஏழ்மை நிலையில் இருக்கும் தூய்மை பணியாளர்களை இந்த அரசு காக்க வேண்டும். விருதாச்சலத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் உள்ளது ஆனால் அது சரியாக செய்து தர முடியவில்லை. அதை சரி செய்து தர வேண்டும். விருதாச்சலத்தை சுத்தமும் சுகாதாரமாக மாற்றி தர வேண்டும். தம்பி ஆதவ் அர்ஜுனன் இல்லை. அவை சீககிரத்திலேயே முடிந்து விடும் என்று நினைக்கிறேன். மக்களுக்கு போய் சேரும் திட்டமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.